தமிழ் மேடையேறு யின் அர்த்தம்

மேடையேறு

வினைச்சொல்-ஏற, -ஏறி

 • 1

  (நாடகம், நாட்டியம் முதலியன) மேடையில் நிகழ்த்தப்படுதல்.

  ‘சென்ற ஆண்டுதான் அவரது இராமாயண நாட்டியம் மேடையேறியது’
  ‘நவீன நாடகங்கள் மேடையேறும் வாய்ப்புகள் இப்போது கூடியிருக்கின்றன’

 • 2

  (கச்சேரி, பேச்சு முதலியவற்றை) நிகழ்த்துவதற்காக மேடையில் ஏறுதல்.

  ‘அவர் மேடையேறிவிட்டால் வரன்முறை இல்லாமல் பேசத் தொடங்கிவிடுவார்’