தமிழ் மேம்படுத்து யின் அர்த்தம்

மேம்படுத்து

வினைச்சொல்-படுத்த, -படுத்தி

 • 1

  (இருக்கும் நிலையைவிட) உயர்வான அல்லது சிறப்பான நிலையை அடையச் செய்தல்.

  ‘நாட்டின் பின்தங்கிய பகுதிகளை மேம்படுத்துவதற்காக அரசு பல புதிய திட்டங்களை வகுத்துள்ளது’
  ‘சமுதாயத்தை மேம்படுத்தும் நோக்கமுடைய இலக்கியம்’
  ‘போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்காக உலக வங்கி கடன் தந்துள்ளது’
  ‘ஐம்பது கோடி ரூபாய் செலவில் துறைமுகத்தை மேம்படுத்தும் பணி விரைவில் துவங்கும்’