தமிழ் மேற்படு யின் அர்த்தம்

மேற்படு

வினைச்சொல்மேற்பட, மேற்பட்டு

 • 1

  (குறிப்பிடப்படும் அளவு, எண்ணிக்கை போன்றவற்றைவிட) கூடுதலாக இருத்தல்.

  ‘இது போன்ற குற்றங்களுக்கு ரூபாய் 500க்கும் மேற்படாமல் அபராதம் விதிக்கப்படுகிறது’
  ‘போட்டியாளர்களின் எண்ணிக்கை பத்துக்கும் மேற்படுவதால் பலத்த போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது’
  ‘மூவாயிரம் ரூபாய்க்கு மேற்படாத வகையில் வாடகைக்கு ஒரு வீடு வேண்டும்’
  ‘இதன் விலை ஆயிரம் ரூபாய்க்கு மேற்படும் என்று நினைக்கிறேன்’