தமிழ் மேல யின் அர்த்தம்

மேல

பெயரடை

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு மேற்கு என்ற பெயரடையின் மாற்று வடிவம்.

  ‘மேல வீதி’
  ‘மேலத் தெரு’

தமிழ் மேல் யின் அர்த்தம்

மேல்

பெயர்ச்சொல்-ஆன

 • 1

  மேற்கு.

  ‘மேல் திசையில் சூரியன் மறையும் நேரம்’
  ‘ஆறு ஊருக்குத் தென்மேலாக ஓடுகிறது’

தமிழ் மேல் யின் அர்த்தம்

மேல்

பெயர்ச்சொல்-ஆன

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு உடம்பு.

  ‘மேல் வலி’
  ‘மேல் பூராவும் தடிப்பாக இருக்கிறது’

தமிழ் மேல் யின் அர்த்தம்

மேல்

பெயர்ச்சொல்-ஆன

 • 1

  ஒப்பிட்டுப் பார்க்கும்போது குறிப்பிட்ட சூழலில் ஒன்றைவிட மற்றொன்று அல்லது ஒருவரைவிட மற்றொருவர் ‘தேவலாம்’ என்ற பொருளில் பயன்படுத்தப்படும் சொல்.

  ‘இந்தப் படத்திற்கு இவரது முந்திய படம் எவ்வளவோ மேல்’
  ‘பண விஷயத்தைப் பொறுத்தவரை உன்னைவிட அவன் மேல்’
  ‘அவையோருக்கு எனது மேலான வணக்கங்கள்’

தமிழ் மேல் யின் அர்த்தம்

மேல்

பெயர்ச்சொல்-ஆன

 • 1

  (உயரம் உள்ள ஒன்றின்) கீழ்ப் பகுதிக்கு அல்லது அடிப்பகுதிக்கு எதிரான பகுதி.

  ‘அலமாரியின் மேல்தட்டில் சாவி இருக்கிறது’
  ‘ஆமை நீரின் மேல்மட்டத்திற்கு வந்து எட்டிப் பார்த்தது’
  ‘சுவரின் மேல்பக்கத்தில் விரிசல் விழுந்திருக்கிறது’

 • 2

  கூடுதல்; அதிகப்படியானது.

  ‘இதுகுறித்து மேல் விவரங்கள் அறிய விரும்புவோர் எங்களுக்கு எழுதவும்’

 • 3

  அதிகபட்சம்.

  ‘மற்றொருவர் கணக்கில் வங்கியில் பணமாகச் செலுத்தும் தொகைக்கு ஒரு மேல் எல்லை உண்டு’

தமிழ் மேல் யின் அர்த்தம்

மேல்

இடைச்சொல்

 • 1

  (நான்காம் வேற்றுமைக்குப் பின்)

  1. 1.1 ‘குறிப்பிடப்படுவதற்கு அதிகமாக’ என்னும் பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்

   ‘சுமார் ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேல் கையாடல் செய்யப்பட்டுள்ளது’
   ‘நான் திரும்பி வருவதற்கு ஒரு வாரத்துக்கு மேல் ஆகும்’

  2. 1.2 ‘(வரையறையாகக் கூறப்படுவதற்கு) பிறகு’ என்ற பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்

   ‘இதற்கு மேல் அவரால் இந்தப் பதவியில் நீடிக்க முடியாது’

 • 2

  (நான்காம் வேற்றுமைக்கு அல்லது ஐந்தாம் வேற்றுமைக்குப் பின்)

  1. 2.1 ‘(பொருளின்) வெளிப்புறத்தில்’ என்ற பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்

   ‘பெட்டிக்கு மேல் என்ன இருக்கிறது?’
   ‘மேஜையின் மேல் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன’
   ‘யானை மேல் சவாரி’

 • 3

  (இட வேற்றுமையாக)

  1. 3.1 ஏழாம் வேற்றுமைப் பொருளில் வரும் இடைச்சொல்; ‘மீது’

   ‘அந்தப் பெண்மேல் கொண்ட காதலை வெளிப்படுத்த முடியாமல் தவிக்கிறான்’
   ‘உன்மேல் எந்தத் தவறும் இல்லை’