தமிழ் மேலாண்மை யின் அர்த்தம்

மேலாண்மை

பெயர்ச்சொல்

 • 1

  (ராணுவம், பொருளாதாரம் முதலியவற்றால்) பிறரைக் கட்டுப்படுத்தக்கூடிய பலம்; மேலோங்கிய நிலை; மேலாதிக்கம்.

  ‘அணு ஆயுத மேலாண்மை’
  ‘வல்லரசுகளின் மேலாண்மையைத் தங்கள் நாடு தொடர்ந்து எதிர்க்கும் என்று அவர் கூறினார்’

 • 2

  பெருகிவரும் வழக்கு (ஒரு அமைப்பு, துறை, நிறுவனம் முதலியவற்றில்) கட்டுப்படுத்துதல், கண்காணித்தல், பராமரித்தல் போன்றவற்றை உள்ளடக்கிய செயல்பாடு; நிர்வாகம்.

  ‘நீர் மேலாண்மையின் அவசியத்தைக் குறித்த கருத்தரங்கம்’
  ‘அரசு மருத்துவமனைகளில் கழிவு மேலாண்மை முறை அறிமுகப்படுத்தப்படும் என்று சுகாதார அமைச்சர் தெரிவித்தார்’