தமிழ் மேலும் யின் அர்த்தம்

மேலும்

வினையடை

 • 1

  (குறிப்பிடப்படுவதோடு) சேர்த்து; கூடுதலாக.

  ‘எங்கள் பள்ளியில் மேலும் ஓர் ஆசிரியர் பணியில் அமர்த்தப்படுவார்’

 • 2

  (ஒரு செயலைச் செய்துகொண்டிருக்கும்போது குறிப்பிடப்படுவதுடன் நின்றுவிடாமல் அதனுடன்) தொடர்ந்து.

  ‘அமைச்சர் மேலும் பேசுகையில் கடத்தலைத் தடுக்க ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை என்றார்’
  ‘அங்கேயே நின்றுவிடாமல் மேலும் நடந்தான்’

தமிழ் மேலும் யின் அர்த்தம்

மேலும்

இடைச்சொல்

 • 1

  ‘(குறிப்பிடப்படுவதோடு) சேர்த்து’ என்ற பொருளில் பயன்படுத்தும் இடைச்சொல்; ‘கூடுதலாக’.

  ‘கொலையாளிகள் என்று சந்தேகிக்கப்படும் இருவர் கைதுசெய்யப்பட்டனர். மேலும் இருவர் தேடப்பட்டுவருகின்றனர்’

 • 2

  முந்தைய வாக்கியத்தில் சொல்லப்பட்டதுடன் கூடுதலான தகவல் தரும்போது பயன்படுத்தும் இடைச்சொல்.

  ‘கொலை நடந்த தினத்தில் தான் ஊரில் இல்லை என்று சொன்னான். மேலும் தனக்கு அப்போது ஒரு விபத்து நிகழ்ந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தான்’
  ‘என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது. மேலும் அடுத்தவர்கள் விவகாரத்தில் நான் தலையிடவும் மாட்டேன்’
  ‘இதற்கு மேலும் என்னால் அவன் கொடுமையைப் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது’