தமிழ் மேலே யின் அர்த்தம்

மேலே

வினையடை

 • 1

  (பொருளை) ஒட்டியபடி மேற்பரப்பில்.

  ‘பாய் முதுகில் குத்தாமலிருக்க எதையாவது மேலே விரித்துக் கொள்’
  ‘மேஜையின் மேலே தலையைச் சாய்த்துப் படுத்திருந்தான்’

 • 2

  உயரே; மேல்நோக்கி.

  ‘மலையில் ஏறும்போது மேலே செல்லச்செல்லக் காற்றழுத்தம் குறைவதை உணரலாம்’

 • 3

  (ஒரு நிகழ்ச்சிக்கு அல்லது நிலைக்கு) பிறகு; தொடர்ந்து.

  ‘சரி, நீ அங்கு சென்றாய். மேலே என்ன நடந்தது?’
  ‘அவளை மேலே சொல்லவிடாமல் தடுத்தான்’