தமிழ் மேலோங்கு யின் அர்த்தம்

மேலோங்கு

வினைச்சொல்மேலோங்க, மேலோங்கி

 • 1

  (குறிப்பிடப்படும் உணர்ச்சி, தன்மை, எண்ணம் போன்றவை மற்றவற்றைவிட) கூடுதலாகவோ அதிகமாகவோ ஏற்படுதல்.

  ‘முயற்சி அனாவசியமோ என்ற எண்ணம்தான் மேலோங்கி நிற்கிறது’
  ‘‘தான்’ என்ற அகம்பாவம்தான் அவரிடம் மேலோங்கி நிற்கிறது’
  ‘அவளது குரலில் கண்டிப்பைவிட அக்கறையே மேலோங்கிக் காணப்பட்டது’

 • 2

  (ஒன்றை அல்லது ஒருவரைவிட மற்றொன்று அல்லது மற்றொருவர்) அதிக வலிமை, சிறப்பு, முக்கியத்துவம் போன்றவற்றை அடைதல்.

  ‘விளையாட்டின் முதல் பாதியில் எதிர் அணியினரின் ஆட்டம் மேலோங்கியிருந்தது’
  ‘இன்றைய உலகில் அறிவியல் வளர்ச்சி மேலோங்கி இருக்கிறது’