தமிழ் மோகம் யின் அர்த்தம்

மோகம்

பெயர்ச்சொல்

 • 1

  பாலுணர்வு வேட்கை.

  ‘அவன்மேல் அவளுக்கு அப்படியொரு மோகமா?’
  ‘அவளுடைய மோக வலையில் விழுந்துவிட்டான்’

 • 2

  ஒன்றினால் ஒருவர் மிக அதிகமாகக் கவரப்பட்டிருக்கும் நிலை.

  ‘மேல்நாட்டு நாகரிகத்தின் மேல் உள்ள மோகம்’
  ‘சினிமா மோகம்’