தமிழ் மோசடி யின் அர்த்தம்

மோசடி

பெயர்ச்சொல்

  • 1

    சுய லாபத்துக்காகச் செய்யும், சட்டத்துக்குப் புறம்பான ஏமாற்றுச் செயல்.

    ‘சீட்டு நிறுவனம் நடத்திப் பல லட்ச ரூபாய்வரை மோசடிசெய்தவர் கைது!’
    ‘நிறுவனக் கணக்குகளைத் தணிக்கை செய்தபோது பல மோசடிகள் வெளியாயின’
    ‘நரம்புத் தளர்ச்சியை நீக்கும் என்று செய்யப்படும் பல விளம்பரங்கள் மோசடியானவை’