தமிழ் மோசம் யின் அர்த்தம்

மோசம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (தரம், அளவு, நிலைமை முதலியவற்றில்) மிகவும் குறைந்த அல்லது தாழ்ந்த நிலை; விரும்பத்தகாத, ஏற்றதாக இல்லாத, தீங்கு விளைவிக்கக்கூடிய தன்மை.

  ‘நீங்கள் குடியிருக்கும் பகுதி நகரிலேயே மோசமான பகுதியாயிற்றே!’
  ‘ஒரே மழையும் காறறுமாக வானிலை மிக மோசமாக இருக்கிறது’
  ‘‘ஒரு மோசமான செய்தி’ என்றவாறே உள்ளே நுழைந்தார்’
  ‘‘கணக்கில் உங்கள் பையன் படு மோசம்’ என்றார் ஆசிரியர்’
  ‘‘அவன் ரொம்ப மோசமான ஆள். அவனிடம் பார்த்துப் பழகு’ என்று எச்சரித்தார்’
  ‘முன்னணி ஹாக்கி வீரர்கள் கடந்த சில மாதங்களாக மிக மோசமாக விளையாடிவருகிறார்கள்’
  ‘சுனாமியால் இந்தோனேசியாவில் மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டது’
  ‘உனது கையெழுத்து மோசமாக இருக்கிறது’
  ‘அம்மாவுக்கு உடல்நிலை மேலும்மேலும் மோசமாகிக்கொண்டே வருகிறது’