தமிழ் மோட்டா யின் அர்த்தம்

மோட்டா

பெயர்ச்சொல்-ஆன

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு (துணியைக் குறித்து வரும்போது) தடித்தது; கனமானது.

  ‘வெயில் காலத்தில் இப்படி ஒரு மோட்டாத் துணியில் சட்டை தைத்துப் போட்டிருக்கிறாயே?’

 • 2

  பேச்சு வழக்கு (அரிசியைக் குறித்து வரும்போது) பெரியது.

  ‘மோட்டா ரகம்’

 • 3

  பேச்சு வழக்கு (ஒருவருடைய உருவத்தைக் குறித்து வரும்போது) ‘முரட்டு’ என்னும் பொருளில் பயன்படுத்தப்படும் சொல்.

  ‘அவர் மோட்டாவான ஆள் என்பதால் யாருமே அவரைப் பார்த்தால் பயப்படத்தான் செய்வார்கள்’