தமிழ் மோது யின் அர்த்தம்

மோது

வினைச்சொல்மோத, மோதி

 • 1

  (ஒரு பரப்பில்) பலத்தோடு இடித்தல், அறைதல், தாக்குதல் போன்ற செயல்களைச் செய்தல்.

  ‘வேகமாக வந்த பேருந்து மரத்தில் மோதியது’
  ‘வண்டியை எங்கும் மோதிவிடாதே’
  ‘கடல் அலை பாறையில் மோதிச் சிதறியது’

 • 2

  சண்டைபோடுதல்.

  ‘போரில் இரண்டு நாடுகளும் கடுமையாக மோதிக்கொண்டன’

 • 3

  ஒருவருக்கு எதிர்ப்பாகவோ போட்டியாகவோ செயல்படுதல்.

  ‘முதலாளியுடன் மோத வேண்டாம் என்று சக தொழிலாளிகள் அவனை எச்சரித்தார்கள்’
  ‘இரண்டு குளிர்பான நிறுவனங்களும் மோதிக்கொள்வது வாடிக்கையாகிவிட்டது’

 • 4

  (விளையாட்டில் ஒருவருடன் அல்லது ஓர் அணியுடன்) போட்டியிடுதல்.

  ‘இறுதிப் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவுடன் மோதும்’