தமிழ் மை யின் அர்த்தம்

மை

பெயர்ச்சொல்

 • 1

  (பெரும்பாலும் பெண்கள் விழி ஓரங்களில் தீட்டிக்கொள்ளப் பயன்படுத்தும்) ஒட்டும் தன்மையுடைய கருப்பு நிற அலங்காரப் பொருள்.

  ‘அவளுடைய மை தீட்டிய கண்கள்’
  ‘குழந்தைக்கு மையைக் குழைத்துப் பொட்டு வைத்தாள்’

 • 2

  (சிவப்பு, நீலம் முதலிய நிறங்களில் இருக்கும்) பேனா போன்றவற்றில் பயன்படுத்தும் திரவம்.

  ‘பச்சை மையை எல்லாரும் உபயோகிப்பது தவறு’
  ‘கடிதத்தைச் சிவப்பு மையால் எழுதியிருந்தான்’

 • 3

  (வண்டிச் சக்கரத்திற்கு இடும்) மசகு எண்ணெய்.

  ‘வேட்டியில் வண்டி மையை அப்பிக்கொண்டு வந்திருக்கிறான். துவைத்தாலும் கறை போகவே இல்லை’

 • 4

  (மந்திரவாதிகள் போன்றோர் உபயோகிப்பதும் மந்திரத்தன்மை உடையதாக நம்பப்படுவதுமான) மேற்குறிப்பிட்ட தன்மையில் இருக்கும் பொருள்.

  ‘ஆடுமாடுகள் காணாமல் போனால் எங்கள் ஊர்க்காரர்கள் வெற்றிலையில் மை தடவிப் பார்ப்பார்கள்’