தமிழ் மையம் யின் அர்த்தம்

மையம்

பெயர்ச்சொல்

 • 1

  (இடத்தில், பரப்பில்) நடு.

  ‘வட்டத்தின் மையத்தில் ஒரு புள்ளி வை’
  ‘தாவரத்தின் மைய வேரே ‘ஆணிவேர்’ என்று அழைக்கப்படுகிறது’

 • 2

  (ஒன்றிற்கு) அடிப்படையாக அல்லது முக்கியமாக அமைவது.

  ‘பொய் சொல்லக் கூடாது என்பதுதான் இந்தக் கதையின் மையக் கருத்து’
  ‘இது தொழிலாளர் பிரச்சினையை மையமாக வைத்து எழுதப்பட்ட கதை’
  ‘கிடா வெட்டும் நிகழ்ச்சிதான் இந்தச் சடங்கின் மையம்’

 • 3

  குறிப்பிட்ட செயல்பாட்டுக்கான இடம் அல்லது அமைப்பு.

  ‘எங்கள் பள்ளிதான் தேர்வு மையம்’
  ‘தத்துவ ஆராய்ச்சி மையம்’

 • 4

  (குறிப்பிட்ட அமைப்பு, நிறுவனம் போன்றவற்றில் எல்லாக் கிளைகளையும் கட்டுப்படுத்தும் அதிகாரம் கொண்ட) தலைமை இடம்.

  ‘மாவட்ட மைய நூலகம்’

தமிழ் மையம் யின் அர்த்தம்

மையம்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு (இஸ்லாமியத் தமிழர் வழக்கில்) பிரேதம்; பிணம்.

  ‘எப்போது மையம் எடுப்பார்கள்?’
  ‘மைய வீட்டுக்குப் போகிறேன். நீயும் வருகிறாயா?’