மொழி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

மொழி1மொழி2

மொழி1

வினைச்சொல்மொழிய, மொழிந்து

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு கூறுதல்.

  ‘எங்கள் அமைப்பு நாட்டுப் பிரிவினையை எதிர்க்கும் என உறுதியாக மொழிந்தார்’

மொழி -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

மொழி1மொழி2

மொழி2

பெயர்ச்சொல்

 • 1

  சொற்களையும் சொற்களின் தொடர்களையும் கொண்ட, மனிதர்கள் தங்கள் கருத்தையும் உணர்வையும் வெளிப்படுத்தித் தங்களுக்குள் தொடர்புகொள்ளப் பயன்படுத்தும் கருவி; பாஷை.

  ‘தமிழ், சமஸ்கிருதம் ஆகிய இரு மொழிகளிலுமே நல்ல புலமை பெற்றவர்’

 • 2

  குறிப்பிட்ட துறையைச் சேர்ந்தவர்கள் அல்லது குறிப்பிட்ட ஒருவர் அடிக்கடி பயன்படுத்தும் சொற்கள்.

  ‘காவல்துறையினர் மொழியில் சொல்வதென்றால் அவனுக்குச் சரியாக லாடம் கட்டிவிட்டார்கள்’