தமிழ் யதார்த்தம் யின் அர்த்தம்
யதார்த்தம்
பெயர்ச்சொல்
- 1
நடைமுறைக்கு முரண்படாதது; நடைமுறையில் உள்ளது.
‘யதார்த்தமான மொழியில் அமைந்த வசனங்கள் இந்தப் படத்தின் வலுவாகும்’ - 2
குறிப்பிட்ட எந்த உட்பொருளையும் கொண்டிருக்காத தன்மை.
‘எப்போது ஊருக்குப் போகிறாய் என்று யதார்த்தமாகத்தான் கேட்டேன். அதற்குப் போய்க் கோபித்துக்கொண்டுவிட்டான்’ - 3
அப்பட்டமான உண்மை.
‘இவை நாம் கட்டாயம் எதிர்கொள்ள வேண்டிய புதிய யதார்த்தங்கள்’