தமிழ் யாரி யின் அர்த்தம்

யாரி

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (இருவரை ஒப்பிட்டுக் கூறும்போது) (வலிமை, தகுதி போன்றவற்றில்) சமமாக உள்ளவர்; துணை.

    ‘யாருக்கு யார் யாரி?’
    ‘விளையாட்டில் உனக்கு நல்ல யாரி கிடைத்துவிட்டது’
    ‘தேவையில்லாமல் அவனிடம் சண்டை போடுகிறீர்களே; உங்களுக்கு அவன் யாரியா?’