தமிழ் யாவர் யின் அர்த்தம்

யாவர்

பிரதிப்பெயர்

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு வினாப் பொருளில் உயர்திணைப் பன்மையில் வரும் பிரதிப்பெயர்.

  ‘இந்த இலக்கண நூலின் உரையாசிரியர்கள் யாவர்?’
  ‘அந்தப் போராட்டத்தில் சம்பந்தப்பட்டோர் யாவர்?’

 • 2

  உயர் வழக்கு அனைவர்.

  ‘விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினர் கதறியழுத காட்சி யாவர் உள்ளத்தையும் உருக்கியது’