தமிழ் யுகம் யின் அர்த்தம்

யுகம்

பெயர்ச்சொல்

 • 1

  (புராணங்களில்) பல்லாயிரக் கணக்கான ஆண்டுகள் கொண்டவையாக (கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலி யுகம் என்று நான்கு வகைகளாக) பிரிக்கப்பட்டிருக்கும் நீண்ட காலங்களுள் ஒன்று.

  ‘காத்திருக்கும் ஒவ்வொரு நிமிஷமும் அவனுக்கு ஒரு யுகமாகத் தோன்றியது’

 • 2

  (பெரும்பாலும் பிற சொற்களோடு இணைந்து) (வரலாற்றில் அல்லது நடைமுறையில்) குறிப்பிட்ட ஒன்று மிகுந்த செல்வாக்குப் பெற்றிருக்கும் காலம்.

  ‘கணிப்பொறி யுகம்’
  ‘விஞ்ஞான யுகம்’