தமிழ் யோசனை யின் அர்த்தம்

யோசனை

பெயர்ச்சொல்

 • 1

  (ஒன்றைக் குறித்து) சிந்தித்து வெளிப்படுத்தும் கருத்து, வழிமுறை முதலியவை; ஆலோசனை.

  ‘நீங்கள் புதிய தொழில் ஒன்றைத் துவங்கலாமே என்று யோசனை தெரிவித்தார்’
  ‘சட்டசபையைக் கலைக்கலாம் என்ற முதல்வரின் யோசனையை ஆளுநர் ஏற்றார்’

 • 2

  (ஒன்றைக் குறித்த) சிந்தனை.

  ‘எப்படிப் பணம் சேர்ப்பது என்று அவன் யோசனை செய்தான்’
  ‘கூப்பிடுவதுகூடக் காதில் விழாமல் அப்படியென்ன பலத்த யோசனை?’