தமிழ் ரகசியம் யின் அர்த்தம்

ரகசியம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  தனக்கு மட்டுமே தெரிந்த, பிறர் அறியாமல் காக்கப்படுகிற செய்தி.

  ‘புதையல் எங்கிருக்கிறது என்ற ரகசியத்தை அவர் கடைசிவரை யாரிடமும் சொல்லவில்லை’
  ‘கடின உழைப்புதான் என்னுடைய வெற்றியின் ரகசியம்’
  உரு வழக்கு ‘படைப்பின் ரகசியத்தை யார் அறிவார்?’

 • 2

  (சம்பந்தப்பட்ட) ஒருசிலரைத் தவிரப் பிறர் அறியாதபடி ஒன்றைச் செய்யும் நிலை.

  ‘தீவிரவாதிகள் ரகசியமாகத்தான் சந்தித்துக்கொள்கிறார்கள்’
  ‘தொழிலதிபரிடம் ரகசிய விசாரணை நடத்தப்பட்டது’
  ‘இருவரும் ரகசியமாக ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்துக்கொண்டார்கள்’
  ‘ரகசியக் குரலில் அவனை அழைத்தான்’

 • 3

  பிறர் அறியாதபடி தன்னளவில் மட்டும் ஒன்றைச் செய்யும் நிலை; அந்தரங்கம்.

  ‘அம்மாவும் தன்னைக் குற்றவாளியாகப் பார்த்தவுடன் அவன் ரகசியமாகக் கண்ணீர் வடித்தான்’
  ‘அவள் தன் காதலனுடன் பேசியதை எண்ணி ரகசியமாகச் சிரித்துக்கொண்டாள்’