ரசம் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : ரசம்1ரசம்2ரசம்3ரசம்4

ரசம்1

பெயர்ச்சொல்

 • 1

  (சாதத்தில் ஊற்றிப் பிசைந்து சாப்பிடுவதற்கான) மிளகு, சீரகம் போன்றவற்றை அரைத்துப் புளிக் கரைசலில் போட்டுக் கொதிக்க வைத்துச் செய்யும் திரவ வகை உணவுப் பொருள்.

 • 2

  (பழத்தைப் பிழிந்து எடுக்கும்) சாறு.

  ‘திராட்சைப் பழ ரசம்’

ரசம் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : ரசம்1ரசம்2ரசம்3ரசம்4

ரசம்2

பெயர்ச்சொல்

 • 1

  (இலக்கியம், நாட்டியம் முதலியவற்றில்) உணர்ச்சி வெளிப்பாடு.

  ‘சோக ரசம் ததும்பும் பாடல்கள்’
  ‘அந்த நடனக் கலைஞர் சிருங்கார ரசத்தை முகத்தில் அற்புதமாகக் கொண்டுவந்தார்’

 • 2

  (பேச்சில், எழுத்தில்) இனிமை; சுவை.

  ‘நடந்த நிகழ்ச்சிகளை அவர் விவரித்த விதம் மிகவும் ரசமாக இருந்தது’

ரசம் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : ரசம்1ரசம்2ரசம்3ரசம்4

ரசம்3

பெயர்ச்சொல்

 • 1

  பிரதிபலிக்கும் தன்மையுடையதாக ஆக்குவதற்காகக் கண்ணாடியின் ஒரு பக்கத்தில் பூசப்படும் சிவப்பு நிற ரசாயனக் கலவை.

  ‘ரசம் போன கண்ணாடியை முதலில் தூக்கியெறி’

ரசம் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : ரசம்1ரசம்2ரசம்3ரசம்4

ரசம்4

பெயர்ச்சொல்

சித்த வைத்தியம்
 • 1

  சித்த வைத்தியம்
  இரத்தமாக மாற்றப்படுவதற்கு முன் உள்ள உணவின் சாரம்.