தமிழ் ரசி யின் அர்த்தம்

ரசி

வினைச்சொல்ரசிக்க, ரசித்து

 • 1

  ஈடுபாட்டோடு அனுபவித்தல்; சுவைத்தல்.

  ‘இசையை ரசித்துக் கேட்டுக்கொண்டிருந்தார்’

 • 2

  (ஈடுபாடு கொள்ளும் அளவுக்கு) இனிமையாக இருத்தல்.

  ‘அவனுடைய பேச்சு ஏனோ இன்று எனக்கு ரசிக்கவில்லை’
  ‘கணவனும் மனைவியும் இணங்கிப்போனால்தான் வாழ்க்கை ரசிக்கும்’