தமிழ் ரசிகன் யின் அர்த்தம்

ரசிகன்

பெயர்ச்சொல்

  • 1

    (கலை, இலக்கியம் முதலியவற்றில்) தேர்ந்த சுவை உள்ளவன்.

  • 2

    (திரைப்படம், விளையாட்டு முதலியவற்றை) விரும்பிப் பார்ப்பவன்; (நடிகர்களிடம், விளையாட்டு வீரர்களிடம்) ஈடுபாடு கொண்டவன்.

    ‘இந்த முறை பிரேசில் அணி உலகக் கோப்பையை வெல்லாதது கால்பந்து ரசிகர்களிடையே பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியது’
    ‘என் தாத்தா தன் பெயருக்குப் பின்னால் ‘கிட்டப்பா ரசிகன்’ என்று போட்டுக்கொள்வார்’