தமிழ் ரணகளம் யின் அர்த்தம்

ரணகளம்

பெயர்ச்சொல்

  • 1

    (ஆயுதங்களால் தாக்கப்பட்டு) பெரும் அளவில் இரத்தம் சிந்திய அல்லது பலத்த காயம் ஏற்பட்ட நிலைமை.

    ‘வன்முறை கட்டுக்கடங்காமல் போனதால் அந்த இடமே ரணகளமாகக் காட்சியளித்தது’
    ‘‘தலைவர் சொல்வதைக் கேட்கவில்லையென்றால் எல்லாம் ரணகளமாகிவிடும்’ என்று அடியாட்கள் கடை முதலாளியை மிரட்டினார்கள்’