தமிழ் ரத்துசெய் யின் அர்த்தம்

ரத்துசெய்

வினைச்சொல்-செய்ய, -செய்து

 • 1

  (வரி, கடன் போன்றவற்றை) செலுத்தத் தேவையில்லை என்று அறிவித்தல்/(சட்டம், தடை முதலியவற்றை) அமலிலிருந்து நீக்குதல்.

  ‘விவசாயிகளுக்குத் தரப்பட்ட கடனை அரசு ரத்துசெய்யும்’
  ‘மதுவிலக்கை ரத்துசெய்ய ஆணை பிறப்பித்தார்’

 • 2

  (நடத்தப்படுவதாக இருந்த நிகழ்ச்சி) நடைபெறாது என்று அறிவித்தல்.

  ‘மழை காரணமாக ஆட்டம் ரத்துசெய்யப்பட்டது’
  ‘நுழைவுத்தேர்வு ரத்துசெய்யப்பட்டதை எதிர்த்துச் சிலர் ஆர்ப்பாட்டம் செய்தனர்’