தமிழ் ரதம் யின் அர்த்தம்

ரதம்

பெயர்ச்சொல்

 • 1

  (அரசர் முதலியோர் பயணத்திற்கும் போருக்கும் பயன்படுத்திய) தேர்.

  ‘ஏழு குதிரைகள் பூட்டிய ரதம்’
  ‘மாமல்லபுரத்தில் ரதங்கள்போல் செய்த கற்கோயில்கள் உள்ளன’

 • 2

  (கோயில்) தேர்.

  ‘ரத உற்சவம்’

 • 3

  சதுரங்க ஆட்டத்தில் தான் இருக்கும் நிலையிலிருந்து நான்கு பக்கங்களிலும் குறுக்கில் நகரும் காய்.