தமிழ் ரதி யின் அர்த்தம்

ரதி

பெயர்ச்சொல்

 • 1

  (அழகுக்கு எடுத்துக்காட்டாகப் புராணத்தில் சொல்லப்படுபவளாகிய) மன்மதனின் மனைவி.

  ‘என் மாமாவின் பெண் பார்ப்பதற்கு ரதிபோல் இருப்பாள்’
  ‘பெரிய ரதி என்று மனத்தில் நினைத்துக்கொண்டிருக்கிறாளா? வருகிற மாப்பிள்ளைகளை எல்லாம் தட்டிக்கழித்துக்கொண்டிருக்கிறாளே?’

தமிழ் ரீதி யின் அர்த்தம்

ரீதி

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (குறிப்பிட்ட) முறை அல்லது போக்கு.

  ‘இந்த ரீதியில் பேசிக்கொண்டேபோனால் எந்தத் தீர்வும் காண முடியாது’
  ‘‘வீட்டில் எல்லோரும் சுகம்தானே?’ என்ற ரீதியில் பேச்சுக்கொடுத்தேன்’

 • 2

  முன் குறிப்பிடப்பட்டதை அடிப்படையாகக் கொண்டிருப்பது அல்லது அதைச் சார்ந்து அமைந்திருப்பது.

  ‘இந்தப் பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வு காணலாம்’
  ‘மரணம் என்பதற்குத் தத்துவ ரீதியில் விளக்கம் கூறினார்’
  ‘தொழில் ரீதியாக ஏற்பட்ட நட்பு’
  ‘இந்த நாவல்களை நாம் சமூக ரீதியாகப் பார்க்க வேண்டும்’
  ‘இந்தப் பிரச்சினையை நான் உளவியல் ரீதியில் பார்க்கிறேன்’