தமிழ் ராஜா யின் அர்த்தம்

ராஜா

பெயர்ச்சொல்

 • 1

  அரசன்.

  ‘சோழ ராஜா’
  ‘புதுக் கோட்டை ராஜா’

 • 2

  (சீட்டுக் கட்டில்) அரசனின் படம் போட்ட ஓர் அட்டை.

 • 3

  (சதுரங்கத்தில்) சுற்றியுள்ள கட்டங்களில் ஒரு கட்டத்திற்கு மட்டுமே நகரும், ஆட்டத்தின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் காய்.

  ‘‘உன் ராஜாவுக்கு ஆபத்து’ என்று சிரித்தபடியே காயை நகர்த்தினான் என் நண்பன்’