தமிழ் ராட்டினம் யின் அர்த்தம்

ராட்டினம்

பெயர்ச்சொல்

 • 1

  (கிணற்றில் தண்ணீர் இறைக்கப் பயன்படும்) கப்பி; சகடை.

  ‘ஒண்டுக்குடித்தன வீடுகளில் வீட்டுக்காரர்கள் இரவில் ராட்டினத்தைக் கழற்றி வைத்துவிடுகிறார்கள்’

 • 2

  பக்கவாட்டில் அல்லது உயரமாக மேலெழுந்து வட்டப் பாதையில் சுற்றிவரக்கூடியதும் இருக்கைகளைக் கொண்டதுமான விளையாட்டுச் சாதனம்.

 • 3

  காண்க: கைராட்டை