தமிழ் ரிஷபம் யின் அர்த்தம்

ரிஷபம்

பெயர்ச்சொல்

 • 1

  உயர் வழக்கு (சிவபெருமானின் வாகனமாகக் கூறப்படும்) காளை.

  ‘கோயிலில் ரிஷப வாகனத்தில் சுவாமி புறப்பாடு தொடங்கியது’

 • 2

  சோதிடம்
  காளையைக் குறியீட்டு வடிவமாக உடைய இரண்டாவது ராசி.

தமிழ் ரிஷபம் யின் அர்த்தம்

ரிஷபம்

பெயர்ச்சொல்

இசைத்துறை
 • 1

  இசைத்துறை
  ஏழு ஸ்வரங்களில் இரண்டாவது ஸ்வரமான ‘ரி’ யைக் குறிப்பது.