தமிழ் ருசிகாண் யின் அர்த்தம்

ருசிகாண்

வினைச்சொல்-காண, -கண்டு

  • 1

    (பெரும்பாலும் எதிர்மறைத் தொனியில்) ஆதாயம் கிடைக்கும் ஒன்றை எளிதாகச் செய்ய இயலும் என்பதை அறிந்துகொள்ளுதல்.

    ‘லஞ்சம் வாங்கி ருசிகண்டவர்கள் அந்தப் பழக்கத்தை எளிதில் மாற்றிக்கொள்வதில்லை’
    ‘அக்கம்பக்கத்தில் திருடியே ருசிகண்டுவிட்டான்’