ரொம்ப -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

ரொம்ப1ரொம்ப2ரொம்ப3

ரொம்ப1

வினையடை

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு மிக அதிக அளவில்.

  ‘கல்லூரியில் படிக்கும் காலத்தில் சாப்பாட்டுக்கே ரொம்பக் கஷ்டப்பட்டிருக்கிறேன்’

 • 2

  பேச்சு வழக்கு நிரம்ப; நிறைய.

  ‘சாப்பிடுவதற்கு முன் தண்ணீர் ரொம்பக் குடிக்காதே!’
  ‘எல்லாம் தெரியும் என்பதுபோல் ரொம்பப் பேசாதே’

ரொம்ப -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

ரொம்ப1ரொம்ப2ரொம்ப3

ரொம்ப2

பெயரடை

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு அதிகமான.

  ‘இந்த நிலைமை மாற ரொம்பக் காலம் ஆகும்’
  ‘அவர் என்னிடம் ரொம்ப நேரம் பேசிக்கொண்டிருந்தார்’
  ‘நீ பரிசு வாங்கியதில் அம்மாவுக்கு ரொம்பப் பெருமை’

ரொம்ப -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

ரொம்ப1ரொம்ப2ரொம்ப3

ரொம்ப3

இடைச்சொல்

 • 1

  ‘மிகவும்’ என்ற பொருளில் பயன்படுத்தப்படும் இடைச்சொல்.

  ‘அவர் எப்போதுமே ரொம்ப வேகமாக நடப்பார்’
  ‘அவருக்கு ரொம்பப் பெரிய மனசு’
  ‘ரொம்ப அகலமான சாலை’