தமிழ் ரேகை வை யின் அர்த்தம்

ரேகை வை

(கைரேகை வை)

வினைச்சொல்வைக்க, வைத்து

  • 1

    (ஒருவரைத் தனித்து அடையாளம் காட்டும் விதமாக) இடதுகைக் கட்டைவிரல் ரேகையைப் பதித்தல்.

    ‘கையெழுத்துப் போடத் தெரியாவிட்டால் என்ன? பத்திரத்தில் கைரேகை வைக்கலாமே’
    ‘ரேகை வைத்துவிட்டுக் கூலியை வாங்கிக்கொண்டு போ’
    ‘கைரேகை வைத்த அடையாள அட்டைகள் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகின்றன’