தமிழ் லபக்கென்று யின் அர்த்தம்

லபக்கென்று

வினையடை

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு (பிடுங்குதல், கவ்வுதல் போன்ற வினைகளோடு) (எதிர்பாராத நேரத்தில்) திடீரென்று; சட்டென்று.

  ‘குழந்தை என்னிடமிருந்த பேனாவை லபக்கென்று பிடுங்கிக்கொண்டது’
  ‘நாய் வடையை லபக்கென்று கவ்விக்கொண்டு ஓடியது’

 • 2

  பேச்சு வழக்கு (விழுங்குதல் என்ற வினையோடு வரும்போது) விரைவாக ஒரே வாயில்.

  ‘பழத்தைக் குழந்தை லபக்கென்று விழுங்கிவிட்டது’