தமிழ் லயி யின் அர்த்தம்

லயி

வினைச்சொல்லயிக்க, லயித்து

  • 1

    (ஒரு செயல் அல்லது சுற்றுப்புறம் போன்றவற்றில் மனம்) ஒன்றுதல்; ஆழ்தல்.

    ‘இசையில் மனம் லயித்திருந்தது’
    ‘வேலையில் லயித்துவிட்டால் அதில் உள்ள கஷ்டங்கள் தெரியாது’
    ‘அர்ச்சனையில் மனம் லயிக்கவில்லை’