தமிழ் லாபம் யின் அர்த்தம்

லாபம்

பெயர்ச்சொல்

 • 1

  (வியாபாரம், தொழில் ஆகியவற்றில்) செய்த முதலீட்டின் பயனாக அல்லது செய்த செலவுக்கு அதிகப்படியாகக் கிடைக்கும் வருமானம்.

  ‘நீங்கள் கேட்கும் விலைக்குப் பழத்தைக் கொடுத்தால் எனக்கு லாபமே கிடைக்காது’
  ‘இந்த ரக நெல்லைப் பயிரிடுவதால் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்’
  ‘இது லாப நோக்கில் நடத்தப்படும் நிறுவனம் அல்ல’

 • 2

  பயன்; நன்மை; ஆதாயம்.

  ‘இப்படிக் கூடிக்கூடி விவாதிப்பதால் யாருக்கு என்ன லாபம்?’
  ‘எந்தக் காரியத்தைச் செய்தாலும் அதில் தனக்கு லாபம் எதிர்பார்க்கும் மனப்போக்கு உடையவர்’