தமிழ் லூட்டி யின் அர்த்தம்

லூட்டி

பெயர்ச்சொல்

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (மற்றவர்களுக்குத் தொல்லையாக அமையும் குழந்தைகளின்) விளையாட்டுத்தனமான அல்லது குறும்புத்தனமான செயல்.

    ‘விடுமுறை விட்டால் குழந்தைகள் அடிக்கிற லூட்டி தாங்க முடியவில்லை’

  • 2

    பேச்சு வழக்கு விஷமத்தனமான செயல்; அட்டகாசம்.

    ‘இந்தப் பகுதியில் ரவுடிகள் அடிக்கும் லூட்டிக்கு அளவே இல்லை’