தமிழ் லேசாக யின் அர்த்தம்

லேசாக

வினையடை

பேச்சு வழக்கு
 • 1

  பேச்சு வழக்கு (அதிகம் என்று சொல்ல முடியாதவாறு) சிறிதளவாக; குறைந்த அளவில்.

  ‘லேசாகக் கண்ணைத் திறந்து பார்த்தான்’
  ‘பாகற்காய்க் குழம்பில் கொஞ்சம் சர்க்கரை கலந்திருந்ததால் லேசாக இனித்தது’
  ‘லேசாகத் தூங்கிவிட்டேன்’
  ‘நாற்காலியில் லேசாக நீட்டிக் கொண்டிருந்த ஆணி வேட்டியைக் கிழித்துவிட்டது’