பெயர்ச்சொல்
பேச்சு வழக்கு- 1
பேச்சு வழக்கு (பெரும்பாலும் எதிர்மறைச் சொற்களோடு வரும்போது) (ஒன்றைச் செய்வதற்குத் தேவையான) சக்தி; திறன்; திராணி; சாமர்த்தியம்.
‘மாதம் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கக்கூட உனக்கு வக்கு இல்லை’‘கண்முன் நடக்கும் அநியாயங்களைக் கூடத் தட்டிக்கேட்க வக்கற்றுப் போய்விட்டோமா?’‘என்னை வக்கு இல்லாத பயல் என்று நினைத்துவிட்டார்களா?’
பெயர்ச்சொல்
இலங்கைத் தமிழ் வழக்கு- 1
இலங்கைத் தமிழ் வழக்கு (பெரும்பாலும் கிணற்றுக்கு அருகில் கட்டப்பட்டிருக்கும்) நீர் நிறைத்துவைக்கும் தொட்டி.
‘பெரிய வக்கில் தண்ணீர் இறைத்து வைக்கக் கூடாதா?’‘வக்கில் இருந்த நீரெல்லாம் என்னாயிற்று?’