தமிழ் வகி யின் அர்த்தம்

வகி

வினைச்சொல்வகிக்க, வகித்து

 • 1

  (பொறுப்பு, பங்கு போன்றவற்றை) ஏற்றிருத்தல் அல்லது பெற்றிருத்தல்; நிர்வகித்தல்.

  ‘இந்த அமைச்சர் பல துறைகளின் பொறுப்பை வகித்து வருகிறார்’
  ‘ஒப்பந்தம் நிறைவேறுவதில் அவர் பெரும் பங்கு வகித்தார்’
  ‘வாக்களிப்பின்போது மூன்று உறுப்பினர்கள் நடுநிலை வகித்தனர்’
  ‘உணவு தானிய உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு’