தமிழ் வகு யின் அர்த்தம்

வகு

வினைச்சொல்வகுக்க, வகுத்து

 • 1

  (முறை, வழி போன்றவற்றை) ஏற்படுத்துதல்; உருவாக்குதல்; அமைத்தல்.

  ‘மக்களுக்காக வகுக்கப்படும் சட்டங்களை மக்கள் மதித்து நடக்க வேண்டும்’
  ‘முன்னோர் வகுத்த முறை இது’
  ‘அவர் தனக்கென்று ஒரு புதுப் பாணியை வகுத்துக்கொண்டார்’
  ‘நமக்கு நாமே சில ஒழுங்குமுறைகளை வகுத்துக்கொண்டு செயல்பட வேண்டும்’

 • 2

  கணிதம்
  ஓர் எண்ணில் மற்றோர் எண் எத்தனை மடங்கு உள்ளது என்று கணக்கிடுதல்.

  ‘ஒன்பதை மூன்றால் வகுக்கவும்’