தமிழ் வகுப்பு யின் அர்த்தம்

வகுப்பு

பெயர்ச்சொல்

 • 1

  (பள்ளிக் கல்வியில் மாணவர்கள் படித்துக் கடந்து வர வேண்டியதாக அமைக்கப்பட்டிருக்கும்) படிப்படியான பல பிரிவுகளுள் ஒன்று.

  ‘நீ எந்த வகுப்புப் படிக்கிறாய்?’
  ‘ஐந்தாம் வகுப்புக்கு இவ்வளவு பாடங்களா!’

 • 2

  (கல்வி நிறுவனங்களில்) ஒரு பாடத்தைக் கற்றுத்தர அட்டவணைப்படி பிரிக்கப்பட்ட கால அளவு.

  ‘நாற்பத்தைந்து நிமிட நேர வகுப்பு’
  ‘தமிழ் வகுப்பு முடிந்ததும் ஆங்கில வகுப்பு தொடங்கும்’

 • 3

  (பெரும்பாலும் கலை, தொழில்நுட்பம் போன்றவற்றில்) முழுநேரப் பயிற்சியாக இல்லாமல் சில மணி நேரம் மட்டுமே அளிக்கப்படும் பயிற்சி.

  ‘தையல் வகுப்புக்குச் சாயங்காலம் போக வேண்டும்’
  ‘சமையல் வகுப்பு’
  ‘ஓவிய வகுப்பு’

 • 4

  (பரீட்சை, தேர்ச்சி முதலியவற்றில்) தர அடிப்படையிலும் (ரயில், விமானம் முதலியவற்றில்) கட்டணம், வசதி அடிப்படையிலும் பகுக்கப்பட்டிருக்கும் பிரிவு.

  ‘முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றான்’
  ‘இரண்டாம் வகுப்பில் பயணம் செய்வது பாதுகாப்பானது’

 • 5

  (சமூகத்தில்) பொருளாதார அடிப்படையில் பிரிக்கப்படும் பிரிவு.

  ‘மத்தியதர வகுப்பைச் சார்ந்தவர்’

 • 6

  சாதி.

  ‘என் நண்பர் வேறு வகுப்பில் கல்யாணம் செய்துகொண்டார்’
  ‘வகுப்புக் கலவரம்’

 • 7

  உயிரியல்
  (உயிரின வகைப்பாட்டில்) ஒத்த வரிசைகளை உள்ளடக்கிய, தொகுதியைவிடச் சிறிய பிரிவு.

  ‘எலி, அணில், வௌவால் போன்ற பிராணிகள் பாலூட்டி வகுப்பைச் சேர்ந்தவை’