தமிழ் வகை யின் அர்த்தம்

வகை

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  பொதுவான அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு ஏற்படுத்தும் பிரிவு; ரகம்.

  ‘இங்கு அனைத்து வகையான கட்டடப் பொருள்களும் கிடைக்கும்’
  ‘பருப்பு வகைகளின் விலை மேலும் கூடலாம்’
  ‘பாம்பு ஊர்வன வகையைச் சேர்ந்த பிராணி’
  ‘எத்தனையோ வகையான மனிதர்கள்’
  ‘வகைவகையான ஆடை அணிகள்’

 • 2

  முறை; விதம்.

  ‘எனக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் அப்பா பேசினார்’
  ‘ஒரு வகையில் நீ சொல்வது சரி’