தமிழ் வக்கிரம் யின் அர்த்தம்

வக்கிரம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (ஒருவருடைய மனப்போக்கு, சிந்தனை, உணர்ச்சி முதலியவை) சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒழுங்கு, நியாயம், நியதி முதலியவற்றிலிருந்து திரிந்த நிலை; இயல்பான தன்மையிலிருந்து பிறழ்ந்த நிலை.

  ‘படத்தில் இடம்பெறும் இரட்டை அர்த்த வசனங்கள் இயக்குனரின் வக்கிர புத்தியைக் காட்டுகின்றன’
  ‘‘வக்கிரம் பிடித்தவன்; எப்படியெல்லாம் பேசுகிறான் பார்!’ என்று அவனைப் பற்றி என்னிடம் முணுமுணுத்தாள்’
  ‘வக்கிரமான பாலுறவு ஆசைகள்’

 • 2

  சோதிடம்
  ஒரு கிரகம் வான்வெளியில் ஒரு ராசியிலிருந்து பின்னோக்கிச் செல்வதாகக் காணப்படும் தோற்றம்.

  ‘சனிக்கிரகம் வக்கிரமாகச் செயல்படும் ஒருசில சந்தர்ப்பங்களில்தான் படுமோசமான பலன்கள் நடக்கும்’
  ‘குரு பகவானின் சுபப் பார்வை பலன்கள், குரு, சனி இருவரின் வக்கிர கதியினால் மாறுபடும் பலன்கள், கிரகங்களிடையே நிகழும் பரிவர்த்தனை ஆகியவையும் எமது கணிப்பில் சேர்க்கப்பட்டு, அவற்றின் அடிப்படையில் பலன்கள் துல்லியமாகக் கூறப்பட்டுள்ளன’