தமிழ் வங்கி யின் அர்த்தம்

வங்கி

பெயர்ச்சொல்

 • 1

  மக்கள் பணம் சேமிக்க உதவுவது, மக்களுக்குக் கடன் தருவது முதலிய செயல்களை மேற்கொள்ளும் நிதி நிறுவனம்.

  ‘வேலையில் சேர்ந்ததும் வங்கியில் ஒரு கணக்கு ஆரம்பித்துவிடு’
  ‘உனக்கு வங்கியில் கணக்கு இருந்தால்தான் இந்தக் காசோலையை மாற்ற முடியும்’
  ‘தேசிய வங்கி’
  ‘தனியார் வங்கி’
  ‘வங்கி மேலாளர்’

 • 2

  பணம் அல்லாத பிறவற்றைச் சேகரித்துவைத்து உதவும் அமைப்பு.

  ‘கண் வங்கி’
  ‘இரத்த வங்கி’
  ‘புத்தக வங்கி’

தமிழ் வங்கி யின் அர்த்தம்

வங்கி

பெயர்ச்சொல்

 • 1

  (முழங்கையின் மேற்பகுதியில் பெண்கள் அணிந்துகொள்ளும்) நீள்வட்டத்தை இரண்டாக மடித்ததுபோல வடிவமைக்கப்பட்ட ஒரு வகை அணிகலன்.