தமிழ் வங்கு யின் அர்த்தம்

வங்கு

பெயர்ச்சொல்

வட்டார வழக்கு
 • 1

  வட்டார வழக்கு காய்ந்து வறண்ட செதிள்களைப் போல மேல்தோலை மாறச் செய்து வெடிப்பு ஏற்படுத்தும் சரும நோய்.

தமிழ் வீங்கு யின் அர்த்தம்

வீங்கு

வினைச்சொல்வீங்க, வீங்கி

 • 1

  (நீர், சீழ், ரத்தம் போன்றவை கோத்திருப்பதால் உடல் உறுப்பு அல்லது அடிபட்ட இடம்) இயல்பான அளவைவிடப் பெருத்தல்; உப்புதல்.

  ‘வயதாகிவிட்டதால் காலைத் தொங்கப் போட்டுக்கொண்டு நீண்ட நேரம் உட்கார முடிவதில்லை. வீங்கிவிடுகிறது’
  ‘விழுந்ததில் அடிபட்ட இடம் அதற்குள் இப்படி வீங்கிவிட்டதே!’
  ‘அழுதுஅழுது வீங்கிய முகத்துடன் வந்தாள்’
  ‘அறை வாங்கிய கன்னம் வீங்கியிருந்தது’