தமிழ் வீச்சு யின் அர்த்தம்

வீச்சு

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  (ஒன்றில் விழும்படியாக அல்லது படும்படியாக ஒன்றை) வேகத்துடன் செலுத்தும் செயல்.

  ‘ஒரே வீச்சில் அரிவாளால் வெட்டி வாழைமரத்தைச் சாய்த்தான்’
  ‘கல்வீச்சில் பலர் காயம்’
  ‘எல்லையில் குண்டு வீச்சு காலைவரை நீடித்தது’

 • 2

  (வாள், சிலம்பாட்டக் கழி போன்றவற்றை) சீராகவும் நேர்த்தியாகவும் வீசும் முறை.

  ‘கம்பு வீச்சில் எத்தனையோ வகைகள் இருக்கின்றன’

 • 3

  (தெளிவாக உணரும் வகையில் இருக்கும் ஒன்று) விரிவாக அமைந்திருப்பது அல்லது பரவியிருப்பது.

  ‘சுதந்திரப் போராட்டத்தின் முழுவீச்சை நாடு முழுவதும் காணமுடிந்தது’
  ‘வட்டாரச் சொற்களின் வீச்சை கி. ராஜநாராயணனின் கதைகளில் காணலாம்’
  ‘சொல் பயன்பாட்டின் வீச்சைக் காட்டுவதற்காக இந்த அகராதியில் நிறைய எடுத்துக்காட்டு வாக்கியங்கள் கொடுத்திருக்கிறோம்’

 • 4

  இலங்கைத் தமிழ் வழக்கு விரைவு; வேகம்.

  ‘வீச்சாக நடந்தால் ஐந்து நிமிடத்தில் கோயிலுக்குப் போய்விடலாம்’
  ‘வீச்சான நடை’