தமிழ் வசனம் யின் அர்த்தம்

வசனம்

பெயர்ச்சொல்

 • 1

  (திரைப்படம், நாடகம் முதலியவற்றில்) இடம்பெறும் ஒவ்வொரு கதாபாத்திரமும் பேசுவதற்காக எழுதப்பட்டது; உரையாடல்.

  ‘இந்த நடிகர் பேசும் வசனங்களுக்காகவே படத்தைப் பார்க்கலாம்’
  ‘இந்தப் படத்திற்கு வசனம் எழுதியவர் யார்?’

 • 2

  அருகிவரும் வழக்கு உரைநடை.

  ‘பாரதியின் கவிதை மற்றும் வசனம்’
  ‘வசன இலக்கியம்’

 • 3

  பேச்சு வழக்கு நீண்ட காலமாகச் சொல்லப்பட்டு வருவது.

  ‘‘நொண்டிக் குதிரைக்குச் சறுக்கியது சாக்கு’ என்று எங்கள் ஊரில் ஒரு வசனம் சொல்வார்கள்’

 • 4

  கிறித்தவ வழக்கு
  விவிலியத்தில் எண்ணிடப்பட்ட வாக்கியம் அல்லது வாக்கியத் தொகுப்பு.

  ‘“கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள், உங்களுக்குத் திறக்கப்படும்” என்பது புதிய ஏற்பாட்டில் உள்ள வசனம்’

 • 5

  இலங்கைத் தமிழ் வழக்கு வாக்கியம்.

  ‘அந்த எழுத்தாளரின் நூலில் வசனங்கள் கன நீளமாக இருக்கும்’
  ‘ஒரு வசனம்கூட ஒழுங்காக எழுதத் தெரியாமல் இருக்கிறாயே’